Thirukkural Dhileeban

என்னைச் செதுக்கிய சிற்பிகள்

" பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலிற் பெரிது. " (குறள் : 103)

வ.எண் பெயர் தகவல் நிழற்படம்
1 புலவர் இராம.வள்ளியப்பன், ஓய்வு பெற்ற தமிழாசிரியர் அமராவதிப்புதூர் நான்; 1330 குறட்பாக்களையும் முழுமையாக மனனம் செய்து வெளியுலகிற்குத் தெரியாமல் இருந்த வேளையில் குறள்மீதும், தாய்த்தமிழ் மீதும் கொண்ட பற்றின் காரணமாக என்னைப்பற்றிக் கேள்விப்பட்டவுடன், தேடிக்கண்டுபிடித்து அவர் பேசுவதற்குச் செல்லும் இடங்களுக்கெல்லாம் அழைத்துச்சென்று என்னை அறிமுகப் படுத்தியதால்தான் உங்கள் முன் இன்று திருக்குறள் திலீபனாக நிற்கின்றேன். அந்;த நேரத்தில் என்னைத் தன் குழந்தை போலச் சீராட்டிப் பாராட்டி முதல் திருக்குறள் கவனக நிகழ்ச்சியாக குருகுலம் உயர்நிலைப் பள்ளி, அமராவதிப்புதூரில் மேடையேற்றிய பெருமை அய்யா அவர்களின் துணைவியார் திருமதி தமயந்தி அம்மையாரையே சாரும்.
2 திரு.சண்முகநாதன், தமிழ்நாடு மின்வாரியம், அமராவதிபுதூர் குறள்மணிகள் திருக்குறள் பயிற்சிப்பள்ளியின் பொறுப்பாளர். எனது சாதனைகளுக்கு ஒவ்வொருநாளும் வழிகாட்டிக் கொண்டிருப்பவர். நான் இந்திய ஆட்சிப்பணித்தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்பதே அவரது கனவு. என்மீது மாறாத அன்பும் அக்கறையும் கொண்டவர். எனது குடும்பத்தில் ஒருவர். அந்தவகையில் இந்த இணையதள முயற்சியும் அவருடையதே!
3 திரு.முரு.வள்ளியப்பன் தலைமைஆசிரியர், ஸ்ரீ.மீ.சு.வி. மேல்நிலைப் பள்ளி, காரைக்குடி. நான் செல்கின்ற நிகழ்ச்சிகளுக்கெல்லாம் ஊக்கம் கொடுத்து, அனுமதி கொடுத்து அனுப்பி வைத்து எனது பரிசுகளைப் பார்த்துப் பாராட்டி மகிழ்வார். அந்தப் பாராட்டுகளே என்னை மேன்மேலும் உயரச்செய்தது.
4 திரு சேவு.முத்துக்குமார், முதுகலைத் தமிழாசிரியர், ஸ்ரீ.மீ.சு.வி. மேல்நிலைப் பள்ளி, காரைக்குடி. தாய் தந்தையர்க்கு ஈடாக நான் வணங்கும் தெய்வம். தாயும் தந்தையுமாகச் சேர்ந்த வடிவம். நான் கலந்து கொண்ட தொலைக்காட்;சி நிகழ்ச்சிகள் முதல் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக, பொது மேடை நிகழ்ச்சிகள் வரை நான் நடத்திய அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் வழிகாட்டியாக இருந்தவர். அவர் என்னைத்தனது மாணவர்களுள் ஒருவனாகப் பார்க்கவில்லை. தனது மகன்களுள் ஒருவராகவே பார்த்தார்> இன்னும் சொல்லப்போனால் எனக்குத் தாயாக> தந்தையாக, ஆசிரியராக, நண்பராக இன்னும் அனைத்துமாக இருந்து என்னுடைய வளர்;ச்சியில் மகிழ்ச்சி கண்டவர். இவர் சொல்லிக்கொடுத்த மந்திரச் சொல் “திலீபா உன்னால் எதுவும் முடியும்”
5 திரு. இரவிச்சந்திரன், தமிழாசிரியா,; ஸ்ரீ.மீ.சு.வி மேல்நிலைப் பள்ளி, காரைக்குடி. முதன் முதலில் திருக்குறள் படிக்க ஊக்கம் கொடுத்தவர். என்னுடைய ஏழாவது வயதில் நாற்பது குறட்பாக்களை ஒப்புவித்து காரைக்குடி காளவாய்ப் பொட்டலில் செந்தமிழர் மன்றம் நடத்திய பொங்கல் விழாவில் பரிசு கொடுத்துப் பாராட்டியவர். அய்யாவின் காலடி தொட்டுத்தான் எனது குறள் பயணம் தொடங்கியது. இந்தப் பயணத்தில் அன்றிலிருந்து இன்று வரை எனக்கு அருகில் இருந்து மொழி இலக்கணமும் கற்றுக்கொடுத்து வழிநடத்திக் கொண்டிருப்பவர்.
6 திரு.கிளமன்ட்ராசு. தாளாளர் திரு.பெர்னாட்சா, தலைமை ஆசிரியர் ஆர்.சி உயர்நிலைப் பள்ளி, உச்சானி. காற்று வழிச் செய்தியில் என்னைக் கண்டெடுத்து தமது பள்ளிக்குத் திருக்குறள் நிகழ்ச்சி நடத்த அழைத்தார்கள். மகிழ்ச்சியோடு நானும் சென்றேன். நிகழ்ச்சியைக் கண்ட தாளாளரும், தலைமை ஆசிரியரும் “திலீபனின் வளர்ச்சியில் நமது பங்காக எதையாவது செய்ய வேண்டும்” என்று சொல்லி அன்று முதல் நான் படிக்கின்ற காலம் வரை படிப்புச் செலவை ஏற்றுக்கொள்வதாகக் கூறினார்கள். எனது ஒன்பதாம் வகுப்பு முதல் இன்று வரை சீருடை தொடங்கி, எழுது பொருள், தேர்வுத்தாள் வாங்குவது வரை அனைத்துச் செலவுகளையும் மகிழ்ச்சியோடு செய்து வருகிறார்கள். 09-02-2011 அன்று எனது பதின்கவனக நிகழ்ச்சியைப் பார்த்து பள்ளித் தாளாளர் “திலீபா உனக்கு செய்கின்ற உதவி தனி மனிதனுக்குச் செய்யும் உதவி அல்ல் இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்குச் செய்கின்ற உதவியாகவே நினைக்கின்றேன”; என்றார். இதை நான் என்றென்றும் மறக்க மாட்டேன். பொருட்செலவு மட்டுமல்லாமல் என்மீது அன்பையும், பாசத்தையும் அளவில்லாமல் செலவு செய்பவர்கள். தாய்த் தமிழால் சொந்தம் கொண்டாடி மகிழும் இந்த இரண்டு அன்பு உள்ளங்களையும் எந்நாளும் மறக்க மாட்டேன்.
7 திரு.பாரிமுடியரசன், முடியரசனார் அவைக்களம். காரைக்குடி. அய்யாவின் வீடும் என் வீடும் கால்நடையாக நடக்கக் கூடிய தூரம் என்பதால் எப்போதும் ஐயா என் மீது ஒரு கண்ணாகவே இருப்பார். சுட்டி விகடன் இதழ் தொடங்கி தமிழகம் முழுவதும் உள்ள தழிழ்அறிஞர்கள், தமிழ்மொழி சார்ந்த இதழ்கள் வரை என்னைக் கொண்டுசென்றவர். இந்த ஆண்டு தொடக்கத்தில் என்னைப் புதுச்சேரிக்குக் அழைத்துச் சென்று முனைவர்மு. இளங்கோவனிடம் அறிமுகம் செய்து அவரது இணையதளம் மூலமாக உலகம் அறியச் செய்தவர்.
8 திருக்குறள்கவனகர் எல்லப்பன். செங்கல்பட்டு கற்றுக்கொள்ள ஆசிரியரைத் தேடி மாணவர் செல்ல வேண்டும் என்ற நிலையை மாற்றி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் திறமை உள்ளவர்கள் எங்கிருந்தாலும் தேடி அலைபவர். பல திருக்குறள் செல்வங்களை உருவாக்கியவர். இன்றும் உருவாக்கிக் கொண்டிருப்பவர். அந்த வகையில் எனது வீட்டிற்கே வந்து கவனகத்தைக் கற்றுக்கொடுத்துக் கவனகராக மேடை ஏற்றியவர். திருக்குறள் திலீபனை கவனகர் திருக்குறள் திலீபன் என்று ஆக்கிய பெருமை அய்யாவையே சேரும்.
9 ஏ. உபைதுர் ரகுமான்-ஆசிரியர் கே.கணேசன்-துணை ஆசிரியர் சுட்டி விகடன் நினைவாற்றல் கலையைத் தொடர்ந்து என்னைப் பத்திரிகைத்துறைக்கு கொண்டு சென்றவர்கள். அதுவும் போதாதென்று மக்கள் தொலைக்காட்சியின் மூலம் உலகம் முழவதும் கொண்டு சென்று அழகு பார்த்தவர்கள். 2008-2009 ஆண்டு சுட்டிவிகடனின் சுட்டி ஸ்டாராக்கிஇ இளம் பத்திரிக்கையாளராக்கிப் பாராட்டியவர்கள். அவர்களுக்கு நான் அன்றுமட்டுமல்ல என்றும் சுட்டிஸ்டாரே!!!
10 உயிர் காத்த மருத்துவர் திரு.காமாட்சி சந்திரன்> அரசு மருத்துவர்> காரைக்குடி. 05-09-2000 அன்று இரு சக்கர வாகனத்தில் அடிபட்டு மண்டை உடைந்து, நினைவிழந்த நிலையில், தன்பிள்ளையாக நினைத்து என்னை மதுரைவரை கொண்டு சென்று காப்பாற்றியிருக்கா விட்டால் நான் இன்று திருக்குறள் திலீபனாய் ஆகியிருக்கமாட்டேன். நினைவு திரும்ப உதவிய மருத்துவர் அய்யா அவர்களை நினைவு உள்ளவரை மறக்க மாட்டேன்.
11 திரு.ச.மீ. இராசகுமார், தலைவர், தமிழர் பண்பாட்டு மனித நேய மன்றம், காரைக்குடி குறள் படித்தால் மட்டும் போதாது, இன்றைய அறிவியல் தொலைத் தொடர்பு உலகில் கணினியும் கற்றல் அவசியம் என்பதை உணர்த்தி கணினி கற்க உதவிய எனது அன்பு மாமா. எனக்கு உதவ வேண்டியது அவரது கடமையும் கூட.
12 ஆசீர்மாணிக்கம் ஓய்வுபெற்ற ஆசிரியை, காரைக்குடி. 83 வயதிலும் என் அருகே அமர்ந்து 500 திருக்குறளையும் சொல்லச் சொல்லிக் கேட்டு உள்ளம் மகிழ்ந்து, உச்சி முகர்ந்து, பணமும் கொடுத்துப் பாராட்டியவா. அந்தப் பாச உள்ளம் இன்று உயிரோடு இல்லை என்றாலும் என் உயிர் உள்ளவரை அவரை மறக்க மாட்டேன்.
13 கவிஞர் கவிபாலா முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர் சங்கம், சிலட்டூர் - அறந்தாங்கி ஜெயா தொலைக்காட்சியின் மக்கள் அரங்க நிகழ்ச்சிக்கு நான் செல்ல முழுமுதற் காரணமானவர். என்னைத் தொலைக்காட்சி மூலம் உலகம் முழுவதும் கொண்டு சென்ற பெருமை. கவிஞர் கவிபாலா அவர்களையே சாரும்.
14 இயக்குனர் திரு.விசு. மக்கள் அரங்கம் ஜெயா தொலைக்காட்சி. தேர்வுக்குழு உறுப்பினர்கள்: திரு.பாபு திரு.இரமேசு. திரு.பாரதி, திரு.மது. உள்ளுரில் கூட எனது கவனகக்கலையைப் பற்றி அறியாத வேளையில் ஜெயா தொலைக்காட்சி மக்கள் அரங்க நிகழ்ச்சி மூலம் (21-02-2009) எனது எண்கவனக (அஷ்டாவதானம்) நிகழச்சியை உலகறியச் செய்தவர்கள். அந்த நிகழ்ச்சியில் அவர்களோடு இருந்த காலம் எனது வாழ்க்கையின் பொற்காலம். அவர்கள் என்மீது காட்டிய அன்பிற்கும், அரவணைப்பிற்கும் என்ன விலை கொடுத்தாலும் ஈடாகாது. எனது எண்கவனக நிகழ்ச்சிக்கு அவர்கள் கொடுத்த வெகுமானம் ரூ.25>000.
15 திரு க.சரவணன் சாக்கூர்> சூராணம்: ஆண்டுக்கவனகத்திற்காக முதல் நூறு ஆண்டுகளை கணினி மயப்படுத்திப் புத்தகமாக்கிக் கொடுத்த எனது அண்ணன். 10,000 ஆண்டுக்கான நாட்காட்டி தயாரித்துக் கொடுத்த பெருமையும்; அவர்களையே சேரும்.
16 திரு.வைரவ மூர்த்தி கருவியப்பட்டி-கண்டனூர். எங்கள் வீட்டில் கணினி இல்லை என்பதை அறிந்து எங்களுக்குச் சொல்லாமலேயே, கோவையில் தனக்காக வைத்திருந்த கணினியை எங்;கள் வீட்டிற்கே கொண்டு வந்து கொடுத்தவர். இதற்கெல்லாம் காரணம் அவர் சிறந்த திருக்குறளன்பர். குறள் வழி நடப்பவர்.
17 திரு. மன்சூர் ராசா திரு . வெ.சிவக்குமார் முத்தமிழ் கூகுள் குழுமம் கோவை. என்னை நேரில் பார்த்ததில்லை. எனது திருக்குறள் நினைவாற்றல் நிகழ்ச்சியையும் கண்டதில்லை. என்னைப்பற்றி அறிந்தது 16-12-2007 தேதியிட்;ட தி இந்து (THE HINDU) ஆங்கில செய்தித்தாளில் வந்த செய்தியை மட்டுமே. உடனே எனக்கு 10>000 ரூபாய்க்கான காசோலை அனுப்பி மகிழ்ந்தனர். அவர்களது விருப்பம், தமிழ்மண்ணுக்கும், தாய்த்தமிழுக்கும் தொண்டு செய்யக்கூடிய நல்ல தமிழ்க்குடிமகனாக வளர வேண்டும் என்பதே. அவர்களது ஆசையை நிச்சயம் நான் நிறைவேற்றுவேன்.
18 முனைவர் மு.இளங்கோவன, புதுச்சேரி: என்னைப் பற்றி அய்யா பாரிமுடிரசன் மூலம் அறிந்தவர். இதுவரை இந்த ஊர்தான் உன்னை அறிந்துள்ளது. நான் உலகறியச் செய்கிறேன் என்று தனது இணையதளத்தின் மூலம் என்னை அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை வரை அறியச் செய்தவர்.
19 திரு.த.பாலகிருட்டிணன் புலியூர் , இளையான்குடி புலியூர் > இளையான்குடி சென்னை முதல் கன்னியாகுமரி வரை எனது நினைவாற்றல் நிகழ்ச்சிகளுக்கு எனது தந்தை உடன் வரமுடியாத நேரங்களில் எல்லாம் ஒரு சகோதரராக என்னுடன் மகிழ்ச்சியோடு வந்து உதவியவர்
20 விடுதலை முரசு தொண்டி அழிந்து வரும் கவனக கலையை பாதுகாத்து பட்டி தொட்டிகள் எல்லாம் பரப்ப வேண்டும் என்பதற்காகவும். குறள்வழி வாழ வேண்டும் என்ற தமிழ் சிந்தனையோடும் எனது அனைத்து நினைவாற்றல் கவனக நிகழ்ச்சிகளையும் முழுமையாக வெளிப்படுத்த இதுவரை இல்லாத தனிமேடை அமைத்து திருக்குறளுக்கு திருவிழா எடுத்த அய்யா தொண்டி சேது விடுதலைமுரசு அவர்களைப் பாதந்தொட்டு வணங்கி மகிழ்கின்றேன்.
21 ஜேசி. வீ. வடிவேலன் நிர்வாக இயக்குனர், VSS Technologies Private Limited காரைக்குடி உள்ளுரில் மட்டும் அறிந்தால் போதாது உன்னை உலகம் முழுவதும் அறியச்செய்வேன் என்று இணையதளத்தை உருவாக்கி, தொடர்ந்து பாதுகாத்து, பராமரித்து இளைய சாதனையாளன் என்ற விருதும் கொடுத்து என்னை உங்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்திய அய்யா ஜேசி. வீ. வடிவேலன அவர்களை இணையம் உள்ளவரை மட்டுமல்ல என் இதயம் இயங்கும்வரையும் மறக்கமாட்டேன்.

" எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு." (குறள் : 110)